ஊரோடு ஒற்றுமையாய் வாழ்

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்…
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு…..
ஊனம் என்பது உடலில் இல்லை …..
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ….
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ….!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு…..
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே …..
ஊதாரியாய் செலவு செய்யாதே …..
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ….
ஊகத்தில் பேசிப்பழகாதே ……!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ….
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ….
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ….
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ….
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ….!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ….
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை …..
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ….
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ….
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு…!
@
கவிப்புயல்
இனியவன்

இனியவன் போன்சாய்கள்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.

1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.

2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.

3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.

இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.

…..

கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப

போன்சாய் அமைத்துள்ளேன்.

……

1) உலகமே

 வைத்தியசாலை ஆக்கியது 

  கொரோனா 

…….

2) காற்றுக்கு என்ன வேலி

 யார் சொன்னது 

  முகக்கவசம் 

……

3) குற்றம் செய்யாதவருக்கும்.

 வீட்டுச்சிறை.

  தனிமைப்படுத்தல்.

…..

4) ஜனநாயகக்கடமை.

 நீண்ட வரிசையில் நின்று

  வாக்களிப்பு.    

   தலைவர் வீடியோ உரை 

……

5) மழை மகிழ்ச்சிக்கும்

 மரணத்துக்கும்

    காரணமாகிறது.

   தவளை.

கவிப்புயல் இனியவன் சீர்க்கூ

கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள் 

01) மரம் உயிர்களின் நுரையீரல் 

02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள் 

03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி 

04) மனம் குரு இல்லாத தியானம் 

05) கவிதை காதலின் தலையெழுத்து 

கஸல் கவிதை 1801

உன் நெற்றியில்… 

பொட்டு உனக்கு…. 

திலகம் – எனக்கு… 

கலகம்……. !!!

காதல் ஒரு… 

முக்கோணம்….. 

உடைந்தால்… 

குப்பைத் தொட்டி…. !!!

என் வீட்டு அறை… 

நினைவு அறையாக… 

இருந்து…. 

நினைவு கல்லறையாக… 

மாறுகிறது…… !!!

@

கஸல் கவிதை 1801

கவிப்புயல் இனியவன்

இனிய தீபாதிருநாளின்

தீப திரு நாளில்……
தீய எண்ணத்த எரித்துவிடு…..
தீய செயலை தூக்கியெறி……
தீய பார்வையை மறைத்துவிடு…..
தீய பேச்சை துப்பியெறி……
தீய தொழிலை செய்யாதே……!

தீங்கு செய்வாரோடு சேராதே……
தீச்சொல் கூறி திரியாதே…….
தீயவை எல்லாம் ஒழித்துவிடு…….
தீப காந்திகல்போல் வாழ்……..
தீம் சொல்லால் பேசு……….
தீரம் கொண்டசெயல் செய்…..
தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்…..!

&
இனிய
இனிப்பான
இனிய தீபாதிருநாளின்
இனியவனின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

உன் அழைப்புக்காய்…..!

நீ….
காதலை….
மறுத்த அந்த நொடி…..
இதயம் கல்லறை……
சென்றுவிட்டது…..!

மூச்சு மட்டும்…….
பேச்சுக்காக இயங்குது…..
தோற்றுப்போனாலும்…..
தேடிக்கொண்டிருக்கிறேன்…..
உன் அழைப்புக்காய்…..!

எனக்காக ஒருமுறை….
வந்துவிட்டு போ……
இல்லை வந்து என்னை…..
கொண்றுவிட்டு போ….!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
பதிவு -201
கவிப்புயல் இனியவன்

உன் காதல் வேண்டும் …..!

கனவிலும் ………
நினைவாலும் ……
கொல்வது போதாதென்று ……
மௌனத்தாலும் ……
கொல்கிறாய் ……….
தயவு செய்து நிஜமாய்……
கொண்றுவிடு ………!

என் குறைந்த பட்ச….
கோரிக்கை நீ வேண்டும் …..
அதிக பட்சகோரிக்கை …..
நீயே வேண்டும் ……..
முடியாதுபோனால் ……..
உன் காதல் வேண்டும் …..!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

முடிவுரையும் நீ ……!!!

என் கவிதையில் ….
முதல் வரியும் நீ
முதன்மை வரியும் நீ
முடிவுரையும் நீ ……!!!

நீ
தூக்கி எறிந்தது …..
ரோஜா இல்லை …..
இதயத்தின் மறு…..
வடிவத்தை …………..!!!

வெறுமையாக ……
பிறந்து சுமையோடு ….
சாக வைக்கும் …..
காதல் …………..!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1057
கவிப்புயல் இனியவன்